அத்திவரதர் வைபவத்தை மேலும் 48 நாள் நீட்டிங்க... உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!

By vinoth kumarFirst Published Aug 13, 2019, 12:18 PM IST
Highlights

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது. 

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது. 

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. முதலில் சயன கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 16-ம் தேதியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவடைகிறது. இதனையடுத்து, 17-ம் தேதி மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்பட உள்ளார்.  

இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் அத்திவரதர் வைபவம் முடிய மிக குறைவான நாட்களே உள்ளன. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். 

இதையும் படிங்க;-ப.சிதம்பரம் இருப்பது பூமிக்குத்தான் பாரம்... முதல்வர் பழனிசாமி ஆவேசம்..!

இன்னும், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க வேண்டியுள்ளதால், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதனையடுத்து, மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி ஆதிகேசவலு அமர்வு அறிவுறுத்தியுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!