டிரான்ஸ்போர்ட் அதிபரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் - ஆயுதப்படை போலீஸ்காரர் கைது

By Asianet TamilFirst Published Aug 2, 2019, 12:57 AM IST
Highlights

மாதவரம் பஜார் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார் (45). மாதவரம் மேம்பாலம் அருகே உள்ள சிஎம்டிஏ வாகன நிறுத்த மையத்தில் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். கடந்த 19ம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றும் பரமேஸ்வரன் (38). என்பவர் அசோக்குமாருக்கு போன் செய்து, ”உங்கள் மீது லாரி தொழில் சம்பந்தமாக பல புகார்கள் உள்ளது. அதனால் இந்த விஷயம் வெளியே தெரியாமலிருக்க எனக்கு ₹10 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அசோக்குமார் பணம் தர மறுத்துள்ளார்.

மாதவரம் பஜார் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார் (45). மாதவரம் மேம்பாலம் அருகே உள்ள சிஎம்டிஏ வாகன நிறுத்த மையத்தில் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். கடந்த 19ம் தேதி அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றும் பரமேஸ்வரன் (38). என்பவர் அசோக்குமாருக்கு போன் செய்து, ”உங்கள் மீது லாரி தொழில் சம்பந்தமாக பல புகார்கள் உள்ளது. அதனால் இந்த விஷயம் வெளியே தெரியாமலிருக்க எனக்கு ₹10 லட்சம் பணம் தர வேண்டும்” என்று கேட்டுள்ளார். அதற்கு அசோக்குமார் பணம் தர மறுத்துள்ளார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் மீண்டும் அவருக்கு போன் செய்து பணம் தரவில்லை என்றால் வழக்கு தொடர்வேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து அசோக்குமார் மாதவரம் போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனைப்படி அசோக்குமார் பரமேஸ்வரனுக்கு போன் செய்து பணம் தருவதாக அவரது அலுவலகத்திற்கு வரவைக்க ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மாதவரம் வாகன நிறுத்த மையத்திற்கு வந்து அசோக்குமாரை சந்தித்தபோது அங்கு மறைந்திருந்த மாதவரம் போலீசார் பரமேஸ்வரனை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

இது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்கு பதிவு செய்து பரமேஸ்வரனை கைது செய்து திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பரமேஸ்வரன் மீது ஏற்கனவே ஏழுகிணறு போலீசில் இதுபோன்ற பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அம்பத்தூர் குற்றப்பிரிவில் மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!