அனைவரும் பிரிவினைவாத ஆதரவை நிறுத்த வேண்டும்.... - ஜி20 மாநாட்டில் மோடி பேச்சு

By Asianet TamilFirst Published Jun 28, 2019, 8:29 AM IST
Highlights

பயங்கரவாதம், அப்பாவி மக்களின் உயிரை பறித்து, னித குலத்திற்கு பெரிய அச்சுறுத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரிவினைவாதத்துக்கான  அனைத்து ஆதரவையும் நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

பயங்கரவாதம், அப்பாவி மக்களின் உயிரை பறித்து, மனித குலத்திற்கு பெரிய அச்சுறுத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரிவினைவாதத்துக்கான  அனைத்து ஆதரவையும் நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

ஜி 20 மாநாட்டுக்கு இடையே பிரிக்ஸ் அமைப்பு தலைவர்கள், அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூடி ஆலோசனை நடத்தினர். இதில், கலந்து கொண்ட பிரதமர் மோடி, பேசியதாவது.

பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. மனித குலத்துக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய சவாலாக  இருக்கிறது. அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுவது மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கான  அனைத்து ஆதரவையும் நிறுத்த வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்து, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். ஒருங்கிணைந்த மற்றும் நிலைக்கத்தக்க வளர்ச்சி பெரிய சவாலாக உள்ளது. சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார சிக்கல்களால் நிலைத்தன்மை பாதிக்கிறது என்றார்.

click me!