பொதுமக்களே உஷார்… - அடுத்த 5 நாட்களுக்கு அடை மழை….

Published : Jun 27, 2019, 01:29 PM IST
பொதுமக்களே உஷார்… - அடுத்த 5 நாட்களுக்கு அடை மழை….

சுருக்கம்

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருத்தணி, கடலூர், தேனி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுவையிலும் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவமழை காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெளியே செல்லும் பொதுமக்கள் குடையுடன் செல்வது பாதுகாப்பனது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!