புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் தமிழக பெண் ரயில்வே லோகோ பைலட்.. யார் இவர்?

By Raghupati R  |  First Published Jun 7, 2024, 9:01 PM IST

புதிய பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு தமிழக பெண் ரயில்வே லோகோ பைலட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ். மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


புதிய மத்திய அரசின் பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா எஸ். மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஐஸ்வர்யா மேனன் இரண்டு லட்சம் மணி நேரங்கள் வந்தே பாரத், ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கி உள்ளார். ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல் ) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டு பெற்றுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

9 முறை அதிமுக தோல்வி.. ரத்தக்கண்ணீர் வடிக்கும் அதிமுக தொண்டர்கள்.! EPS-க்கு அதிர்ச்சி கொடுத்த கே.சி பழனிச்சாமி

மேலும் அவர் சென்னை - விஜயவாடா, சென்னை - கோயம்புத்தூர் பிரிவில் துவக்க நாள் முதலே வந்தே பாரத் ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நகைகளை விற்க போறீங்களா.. இனிமேல் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நோட் பண்ணிக்கோங்க..

click me!