DMDK: ஆதாரம் என்கிட்ட இருக்கு! விஜயபிரபாகர் தோல்வியடையவில்லை தோற்கடிக்கப்பட்டுள்ளார்! பிரேமலதா பகீர்!

By vinoth kumar  |  First Published Jun 6, 2024, 12:55 PM IST

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயபிரபாகரனுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி மாறி முன்னிலையில் வந்தனர். 


விருதுநகரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயபிரபாகரனுக்கும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மாறி மாறி முன்னிலையில் வந்தனர். இறுதியில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபிரபாகரன் தோல்வி அடைந்தார். இந்நிலையில், விஜயபிரபாகர் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தியுள்ளனர் என பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். 

Latest Videos

undefined

இதையும் படிங்க: BJP: அண்ணாமலை மத்திய அமைச்சராகிறாரா.? தமிழகத்தில் இருந்து யாருக்கெல்லாம் பதவி கிடைக்கும்.? வெளியான புதிய தகவல்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் மிக மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்தார். அவர் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் பல வேட்பாளர்கள் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர். விஜயபிரபாகர் அப்படி தோற்று இருந்தால் நாங்களும் ஏற்று இருப்போம். ஆனால், சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டார்.

உணவு இடைவேளைக்குப் பின் இரண்டு மணிநேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் உள்ளது. விருதுநகர் தொகுதி முடிவு அறிவிக்கும் முன் 40 தொகுதிகளில் வெற்றி என முதல்வர் கூறியது ஏன்? அதிகாரப்பூர்வ அறிவிப்பும், களத்தில் இருந்து வந்த தகவல்களும் முரண்பாடாக இருந்தன. தபால் ஓட்டுகளை நள்ளிரவில் எண்ணியது ஏன்? விருதுநகர் ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். மதுரையில் இருக்கும் அமைச்சர் ஒருவர் விருதுநகர் செல்ல வேண்டிய அவசியம் என்ன? எனவும் அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பியுள்ளார்.

 

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இமெயில் மூலம் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம். விருதுநகர் தொகுதியில்  ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மற்றொரு முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி உறுதி. அக்கட்சியில் இருப்பது உட்கட்சி பிரச்னை. அதிமுகவில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அது வரவேற்கத்தக்கது என பிரேமலதா கூறியுள்ளார். 

click me!