Rajinikanth: நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

By Velmurugan s  |  First Published Jun 5, 2024, 6:52 PM IST

ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் ஸ்டாலினுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.


தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் தனது வேட்டையன் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனிடையே ரஜினிகாந்த் இன்று திடீரென டெல்லி சென்றிருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வந்தன. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் டெல்லி சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.

Savukku Shankar: சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு; நீதிபதி அதிரடி உத்தரவு

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள என்னுடைய அருமை நண்பர், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு, வாழ்த்துக்கள்.

"ஆட்டை கொடுமை படுத்தாமல் பிரியாணி போடுங்கள்" அண்ணாமலையின் கோரிக்கையை டிரெண்டாக்கும் திமுக.வினர்

மற்றொரு நண்பர் சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். அவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். NDA ஆட்சி அமைக்க இருக்கிறது. மூன்றாவது முறையாக மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

டெல்லியில் பதவி ஏற்பு நிகழ்வுக்கு செல்வதற்கு குறித்து முடிவெடுக்கவில்லை. ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றேன். அருமையாக இருந்தது. ஒரு முறையும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

click me!