சென்னையிலிருந்து பூஜை போட்டு பாரீஸுக்கு கிளம்பிய ஏர் ஃபிரான்ஸ் விமானம்..! வீடியோ

Published : Jul 10, 2021, 05:14 PM ISTUpdated : Jul 10, 2021, 06:01 PM IST
சென்னையிலிருந்து பூஜை போட்டு பாரீஸுக்கு கிளம்பிய ஏர் ஃபிரான்ஸ் விமானம்..! வீடியோ

சுருக்கம்

சென்னையிலிருந்து ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு சென்னையிலிருந்து ஏர் ஃபிரான்ஸ் விமானம் புறப்படுவதற்கு முன்பாக வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது.  

கொரோனா பெருந்தொற்றால் சென்னையிலிருந்து ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. 

கொரோனாவிற்கு பிறகு மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து பாரிஸுக்கு விமான சேவை தொடங்கப்பட்ட பிறகும் சென்னையிலிருந்து விமான சேவை தொடங்கப்படாமல் இருந்ததால் சென்னையீலிருந்து பெங்களூரு சென்று அங்கிருந்தோ அல்லது துபாய் சென்று அங்கிருந்தோ பாரீஸுக்கு செல்ல வேண்டியிருந்தது.

கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி பாரிஸிலிருந்து ஏர் ஃபிரான்ஸ் ஏர்லைன்ஸ் சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது. ஜூன் 26ம் தேதி காலை 10.25 மணிக்கு பாரீஸில் இருந்து புறப்பட்ட விமானம் இரவு 11.45 மணிக்கு சென்னை வந்தடைந்தது. 

"

பின்னர் சென்னையிலிருந்து பாரிஸுக்கு புறப்படும் முன்பாக ரன்வேயில் வைத்து, வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் விமான நிறுவனத்தினர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

RO Water: ஷாக் ரிப்போர்ட்..! RO தண்ணீரிலும் பாக்டீரியா.! புதிய ஆய்வு வெளியிட்ட எச்சரிக்கை!
மகனுக்காக ராமதாஸ் கொடுத்த அசைவ விருந்து.! அப்பா மனக்காயத்திற்கு மருந்தான அன்புமணி கண்ணீர்.! அய்யா குடும்பம் ஒன்று சேர இதுதான் காரணம்.!