அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் 16 பேரின் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் யார்.?
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு 28 நாட்கள் மட்டுமே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், திமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல அதிமுகவும் தங்களது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன் படி
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பிரேம்குமார்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி டாக்டர் எஸ் பசுபதி
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி டாக்டர் ஆர் அசோகன்
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கலியபெருமாள்
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அருணாச்சலம்
நீலகிரி தனித் தொகுதியில் லோகோஷ் தமிழ்ச்செல்வன்
கோவை நாடாளுமன்ற தொகுதி சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி கார்த்திக் அப்புசாமி என்கின்ற கார்த்திகேயன்
திருச்சிராப்பள்ளி கருப்பையா
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி சந்திரமோகன்
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாபு
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி சேவியர் தாஸ.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி சிவசாமி வேலுமணி
திருநெல்வேலி சிம்லா முத்துச்சோழன்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பசிலியா நசரேத்
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி தமிழ்வேந்தன்