நீடிக்கும் பெருங்குழப்பம்... இ-பதிவில் திருமணம் பிரிவு மீண்டும் நீக்கம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 18, 2021, 08:03 PM ISTUpdated : May 18, 2021, 08:05 PM IST
நீடிக்கும் பெருங்குழப்பம்... இ-பதிவில் திருமணம் பிரிவு மீண்டும் நீக்கம்...!

சுருக்கம்

இருப்பினும் பொது பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து இன்று காலை திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு  பகுதியாக மாவட்டத்துக்குள், மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க கூட இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து திருமணத்திற்கான அனுமதி மட்டும் நீக்கப்பட்டது. மருத்துவம், இறப்பு, திருமணத்திற்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திருமணத்திற்கான அனுமதி மட்டும் இ-பதிவு இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 

திருமணத்திற்காக நிறைய பேர் விண்ணப்பிப்பதாகவும், அதிகம் பேர் வெளியில் வரக்கூடிய சூழல் இருப்பதால் அந்த பிரிவு நீக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும் திருமண என்ற பிரிவை பலரும் தவறாக பயன்படுத்தி இ-பதிவு செய்வதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. 

இருப்பினும் பொது பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து இன்று காலை திருமணம் என்ற பிரிவு மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆனால் ஏராளமானோர் உடனடியாக விண்ணப்பித்ததால் அந்த பிரிவு சில மணி நேரங்களிலேயே மீண்டும் நீக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெருங்குழப்பம் நீடித்து வருகிறது. 
 

PREV
click me!

Recommended Stories

அதிகாலையில் அலறிய சென்னை! சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொ**லை
ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!