'நவம்பர் ஸ்டோரியில்' ஹேக்கர் அவதாரம் எடுக்கும் தமன்னா..! எகிறும் எதிர்பார்ப்பு..!

Published : May 20, 2021, 06:12 PM ISTUpdated : May 20, 2021, 06:16 PM IST
'நவம்பர் ஸ்டோரியில்' ஹேக்கர் அவதாரம் எடுக்கும் தமன்னா..! எகிறும் எதிர்பார்ப்பு..!

சுருக்கம்

இன்று முதல் தமன்னா நடித்துள்ள 'நவம்பர் ஸ்டோரிஸ்' என்கிற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட வெப் சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளது.

ஹாட் ஸ்டார் ஓடிடி தலத்தில் ஏற்கனவே நடிகை வாணி போஜன் மற்றும் ஜெய் நடிப்பில் வெளியான 'ட்ரிப்பிள்ஸ்' மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'லைவ் டெலிகாஸ்ட்' ஆகிய இரண்டு, வெப் சீரிஸ் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இன்று முதல் தமன்னா நடித்துள்ள 'நவம்பர் ஸ்டோரிஸ்' என்கிற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட வெப் சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளது.

கிரிம் - திரில்லர் ஜர்னரில் இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இதில், தமன்னா ஹக்கராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இது குறித்த தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த வெப் சீரிஸின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, மே - 20 ஆம் தேதி முதல், அதாவது இன்றில் இருந்து இந்த வெப் தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

கதையின் நாயகியாக, நடிகை தமன்னா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த வெப் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த வெப் தொடரில், தமன்னா, ஜிஎம் குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ராமசுப்பிரமணியம் என்பவர் இந்த வெப் தொடரை இயக்கி உள்ளார். இந்த தொடரின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!