குன்றத்தூர் சம்பவத்தில் கைதான துணை நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமீன்

By SG Balan  |  First Published Nov 4, 2023, 6:28 PM IST

சென்னையில் மாணவர்களைத் தாக்கியதற்காகக் கைது செய்யப்பட்ட துணை நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


சென்னையில் மாணவர்களைத் தாக்கியதற்காகக் கைது செய்யப்பட்ட துணை நடிகை ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை குன்றத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை கூட்டமாக வந்த அரசுப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் உள்ளே செல்ல இடம் இல்லாமல் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தனர். அப்போது ரஞ்சனா நாச்சியார் பேருந்தை வழிமறித்து நிறுத்தி, ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மோசமாகத் திட்டினார்.

Tap to resize

Latest Videos

undefined

பின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கீழே இறங்கச் சொல்லி மிரட்டினார். இறங்காத மாணவர்களை வெறியோடு அடித்து கீழே இறக்கினார். அவரைத் தட்டிக்கேட்டவர்களிடம் நான் ஒரு போலீஸ் அதிகாரி என்று டூப் விட்டார். அவர் செய்த அட்டீழியம் எல்லாம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது. உடனே போலீசார் கெருகம்பாக்கத்தில் உள்ள ரஞ்சனாவின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

சென்னையில் பள்ளி மாணவர்களை தாக்கி சீன் காட்டிய நடிகையை அலேக்கா தூக்கி சென்ற போலீஸ்

ரஞ்சனா நாச்சியார் மாணவர்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் ஶ்ரீபெரும்புதூரில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ரஞ்சனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

40 நாள்கள் தினமும் காலையும் மாலையும் காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகரான ரஞ்சனா நாச்சியார் சினிமாவிலும் சின்னத்திரை தொடர்களிலும் துணை நடிகையாக நடித்துவருகிறார்.

click me!