சென்னையை அடுத்த நங்கநல்லூரில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களை குறிவைத்து பின்புறத்தை தட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த பெண் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக பறந்து சென்றுவிடுவார். மீண்டும் அதே பகுதியில் வேறு ஒரு பெண்ணின் பின்புறம் தட்டும் போது சுதாரித்துக்கொண்ட அந்த இளம்பெண் இளைஞரை மடக்கி பிடித்து அப்பகுதியினர் இளைஞரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னையில் சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களின் பின்புறத்தை தட்டுவதை வழக்காக கொண்டிருந்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் ஹெல்மெட் அணிந்து செயின் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சம்பவம் அதிகரித்த நிலையில் தற்போது இளைஞர்கள் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் இளம்பெண் பெண்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னையை அடுத்த நங்கநல்லூரில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களை குறிவைத்து பின்புறத்தை தட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த பெண் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக பறந்து சென்றுவிடுவார்.
undefined
மீண்டும் அதே பகுதியில் வேறு ஒரு பெண்ணின் பின்புறம் தட்டும் போது சுதாரித்துக்கொண்ட அந்த இளம்பெண் இளைஞரை மடக்கி பிடித்து அப்பகுதியினர் இளைஞரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார்நகர் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). கம்ப்யூட்டர் என்ஜீனியரான இவர் திருமணமானவர். மேலும், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரியவந்தது.
நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சாலையில் நடந்து செல்லும் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் பின்புறத்தை தட்டுவதை வழக்கமாக கொண்டிருந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை பழவந்தாங்கல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.