தமிழ்நாட்டில் மேலும் 98 பேருக்கு கொரோனா.. கொஞ்சம் கூட குறையவே இல்ல.. பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சம்

Published : Apr 13, 2020, 06:43 PM ISTUpdated : Apr 13, 2020, 06:45 PM IST
தமிழ்நாட்டில் மேலும் 98 பேருக்கு கொரோனா.. கொஞ்சம் கூட குறையவே இல்ல.. பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சம்

சுருக்கம்

தமிழ்நாட்டில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதையடுத்து தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 1,173ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டிவருகிறது.

நேற்று வரை 1075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா இருப்பதை சுகாதாரத்துறை செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1173ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தடுப்பு பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டிருப்பதுடன், பரிசோதனை எண்ணிக்கையும் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது. நேற்று சுமார் 1100 பேருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 2100 பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றுள்ளவர்களை முழுமையாக கண்டறியும் விதமாக பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது தமிழக அரசு. அதன்படி இதுவரை 12,746 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைவுதான் என்றாலும், தமிழ்நாட்டில் அனைவருக்கும் டெஸ்ட் செய்யப்படுவதில்லை. அறிகுறிகள் உள்ளவர்களூக்கு மட்டுமே டெஸ்ட் செய்யப்படுகிறது. ரேபிட் டெஸ்ட் கிட் வந்ததும் தான் மேலும் நிறைய பேருக்கு டெஸ்ட் செய்யப்படும்.

தமிழ்நாட்டில் இன்று 33,580 பேர் வீட்டு கண்காணிப்பில் இருப்பதாகவும், 53,380 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை முடித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இதுவரை 11 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ள நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் 58 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!