சென்னையில் சமூக பரவலான கொரோனா... 9 மாத கர்ப்பிணி, சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் குடும்பத்தினரும் பாதிப்பு..!

By vinoth kumarFirst Published Apr 29, 2020, 5:36 PM IST
Highlights

சென்னை வடபழனியில் 9 மாத கர்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 

சென்னை வடபழனியில் 9 மாத கர்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மந்தைவெளி பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்திருந்த கடை உரிமையாளரின் குடும்பத்தினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் கடை உரிமையாளர், அவரது மனைவி, மகள், மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து  சூப்பர் மார்க்கெட் கடை மூடப்பட்டது. மேலும் சூப்பர் மார்க்கெட் கடைக்கு சென்று வந்தவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. மேலும், அவர்கள் வசித்து வந்த பகுதியிலும் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே, சென்னை வடபழனி அழகிரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 9 மாத கர்பிணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது கணவர், மகன் உள்ளிட்டோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

click me!