சென்னை செங்குன்றம் பகுதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கோடி மதிப்புள்ள 9.1கிலோ மெத்தெப்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அண்மையில் தீவிர சோனையில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் சந்திரசேகர் என்ற இருவரை கைது செய்து விசாரித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பிலான 9.1கிலோ மெத்தெப்படமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த போதைப் பொருட்களை செய்தியாளர்களிடம், காட்சிப்படுத்திய வடக்கு காவல்துறை கூடுதல் ஆணையர் டிஎஸ் அன்பு, பின்னர் பேசுகையில், கடந்த வாரம 317 கிராம் மெத்தப்டமைன் போதைப்பொருள் கைபற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியான விசாரணையில் இப்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். இது மாநிலத்திலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் என்றார். மேலும், கைது செய்யப்பட்டவர்களின் வங்கி நிதி பரிவர்த்தனை உள்ளிட விவரங்கள் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த போதை மருந்து சந்தையில் சுமார் ரூ.9000 முதல் ரூ.10000 வரை கிடைப்பதாக தெரிவித்த கூடுதல் ஆணையர் ஆர்வி ரம்யா பாரதி, மணிப்பூரில் உள்ள சர்வதேச எல்லையான மோரேவிலிருந்து அர்ஜூன் என்பவர் கடத்தி கொண்டுவந்ததாக தெரிவித்தனர். மேலும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசர் தெரிவித்தனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஊழல்.. பகீர் கிளப்பிய எடப்பாடி.! உண்மையா.? பிடிஆர் சொன்ன விளக்கம்