5 மாவட்ட விவசாயிகள் அதிமுகவுக்கு எதிராக திரும்புவார்களா..? தேர்தல் நேரத்தில் எடப்பாடிக்கு புது தலைவலி..!

By vinoth kumarFirst Published Apr 6, 2019, 10:58 AM IST
Highlights

சென்னை- சேலம் 8 வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை- சேலம் 8 வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமைச்சாலை அமைக்க மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் பாதிக்கப்படும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அரசும் காவல்துறையை வைத்து கடுமையான ஒடுக்குமுறையில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் மற்றும் நிலம் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை  நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், முதற்கட்டமாக நிலத்தை கையகப்படுத்த நீதிபதிகள் தடை விதித்தனர். திட்டத்தை எதிர்த்தவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  

இந்த வழக்கில் பதில் அளித்த மத்திய அரசு அனுமதி கொடுத்த பிறகுதான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் விளக்கமளித்திருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் 8-ம் தேதி, திங்கள்கிழமை வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே இந்த தீர்ப்பு வெளியாக உள்ளதால் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் 5 மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் அதிமுக-பாஜக கூட்டணி எதிராக திரும்புவார்கள். இதனால் அதிமுகவுக்கு புதுதலைவலி ஏற்பட்டுள்ளது.

click me!