மேலும் ஃபீஸ் பிடுங்குவதற்காக எல்.கே.ஜி. குழந்தையைக் கூட ஃபெயில் ஆக்கிய சென்னை தனியார் பள்ளி...

By Muthurama LingamFirst Published Apr 4, 2019, 3:00 PM IST
Highlights

ஐந்தாம் வகுப்பு முடிக்கும் வரை குழந்தைகளை பரிட்சைகளில் ஃபெயில் ஆக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி, பணம் கறக்கும் எண்ணத்துடன் எல்.கே.ஜி. குழந்தையைக் கூட ஃபெயில் ஆக்கிக் கொடூரமாக நடந்துகொண்ட தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

ஐந்தாம் வகுப்பு முடிக்கும் வரை குழந்தைகளை பரிட்சைகளில் ஃபெயில் ஆக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி, பணம் கறக்கும் எண்ணத்துடன் எல்.கே.ஜி. குழந்தையைக் கூட ஃபெயில் ஆக்கிக் கொடூரமாக நடந்துகொண்ட தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

சென்னை அடையாறில் உள்ள பாரத் சிபிஎஸ்இ பள்ளியில் ஜெய்சங்கர் - ஹேமாவதி தம்பதியர் தங்களது மூன்று வயது குழந்தையை எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளனர். கடந்த  மாதம் அப்பெற்றோரை  பள்ளிக்கு அழைத்த நிர்வாகம் பெற்றோரிடம் உ ங்களது குழந்தை எல்.கே.ஜி வகுப்பில் மோசமான மதிப்பெண் எடுத்த காரணத்துக்காக ஃபெயில் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  வரும் ஆண்டும் மீண்டும் எல்.கே.ஜி வகுப்பிலேயே படிக்க வேண்டும் என்றும் அதற்காகத் தனி கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என்றும் அந்தப் பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் வற்புறுத்தியுள்ளது. எல்.கே.ஜி-க்காக ஒரு டேர்ம்-க்கு 15,275 ரூபாய் கட்டணமாகக் கேட்டுள்ளனர். ஆனால், கடந்த ஓராண்டாக அந்தக் குழந்தைக்கு அதே எல்.கே.ஜி வகுப்புக்கு 65,273 ரூபாய் கட்டணம் செலுத்தியுள்ளனர் அப்பெற்றோர்.

சட்டப்படி ஐந்தாம் வகுப்பு வரையில் ஒரு குழந்தையை ஃபெயில் செய்யக்கூடாது. சட்டத்தை மீறி ஃபெயில் செய்த தனியார் பள்ளி மீது அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இச்செய்தி தற்போது வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பணம் பறிப்பதற்காக சின்னஞ்சிறு குழந்தையைக்கூட ஃபெயில் ஆக்கிய அப்பள்ளிக்கு தக்க பாடம் கற்பிக்கவேண்டும் என்று மக்கள் பொங்கி வருகின்றனர்.

click me!