தமிழ்நாட்டில் இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 219 பேரை குணப்படுத்தி சாதனை படைத்த தமிழ்நாடு

Published : May 09, 2020, 07:33 PM ISTUpdated : May 15, 2020, 06:21 PM IST
தமிழ்நாட்டில் இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 219 பேரை குணப்படுத்தி சாதனை படைத்த தமிழ்நாடு

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை தினமும் 500க்கு அதிகமாகவுள்ளது. நேற்று 600 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 526 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை 52 பரிசோதனை ஆய்வகங்கள் இருந்த நிலையில், இன்று ஒரு ஆய்வகத்திற்கு அனுமதி பெறப்பட்டதையடுத்து மொத்தம் 53 ஆய்வகங்கள் உள்ளன. 

இன்று 12,999 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 526 பேருக்கு தொற்று உறுதியானது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 3330ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 219 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1824ஆக அதிகரித்துள்ளது. இதுதான் தமிழ்நாட்டில் ஒரே நாளில் குணமடைந்த அதிகமான எண்ணிக்கை. இன்று 4 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை