சூடு பிடிக்கும் டாஸ்மாக் விவகாரம்: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!

By manimegalai aFirst Published May 9, 2020, 1:51 PM IST
Highlights

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா தொற்றிற்கு முறையான தடுப்பு மருந்துகள் இல்லாததால்  மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா தொற்றிற்கு முறையான தடுப்பு மருந்துகள் இல்லாததால்  மூன்றாம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் கண்டனங்கள் எழுந்தன. நாற்பது நாட்களாக மது இல்லாமல் இருந்த குடிமகன்கள் டாஸ்மாக் வாசலில் காத்திருந்து சரக்கு பாட்டில்களை வாங்கிச்சென்றனர். 

இந்நிலையில் டாஸ்மாக் மது விற்பனைக்கு தடை விதிக்க கோரி நேற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது டாஸ்மாக் கடைகளில் தனிமனித இடைவெளி சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், குடிபோதையால் நேற்று முழுவதும் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள் குறித்தும் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்களுக்கு கூட அனுமதி அளிக்கப்படாத போது டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது ஏன் என மனுதாரர் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதையடுத்து ஊரடங் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே சமயத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய தடை இல்லை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இந்நிலையில், உயர் நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது, டாஸ்மாக் விவகாரத்தில் தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் தற்போது இந்த டாஸ்மாக் விவகாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

click me!