ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வசூல் - டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் குவியும் புகார்

By Asianet TamilFirst Published Aug 6, 2019, 1:19 AM IST
Highlights

டாஸ்மாக் கடைகளில் ரூ.5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையில் வசூல் செய்வதாக மாவட்ட மேலாளர்கள் மீது டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

டாஸ்மாக் கடைகளில் ரூ.5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையில் வசூல் செய்வதாக மாவட்ட மேலாளர்கள் மீது டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய 5 மண்டலங்கள் உள்ளது. இதேபோல், மொத்தம் 37 மாவட்டங்களும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்கு மாவட்ட மேலாளர்களின் கீழ் புதிய திட்டங்களை நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவிற்பதையும் மாவட்ட மேலாளர்கள் கண்காணித்து கடை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. இந்தநிலையில், ஆய்வுக்கு வரும் மாவட்ட மேலாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது.

குறிப்பாக மாவட்ட மேலாளர்கள் சுழற்சி முறையில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு செய்த கடைக்கே மறுபடியும், மறுபடியும் சென்று ஆய்வு செய்யக்கூடாது. ஆனால், சில மாவட்ட மேலாளர்கள் நிர்வாகத்தின் உத்தரவை மீறி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடைகளில் ஆய்வுக்கு வரும் மாவட்ட மேலாளர்கள் சிலர் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையில் நாள்தோறும் கடைப்பணியாளர்களிடமிருந்து வசூல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தினம்தோறும் 300க்கும் மேற்பட்ட புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்டு வருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வாட்ஸ் அப் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் மாவட்ட மேலாளர்கள் மீது தலைமை அலுவலகத்திற்கு புகார் அனுப்பியவாறு உள்ளனர்.

click me!