தமிழ்நாட்டில் தொடரும் சோகம்: முதல்முறையாக 4000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு..! 3095 பேர் டிஸ்சார்ஜ்

By karthikeyan VFirst Published Jul 2, 2020, 6:57 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 4343 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98392ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 4343 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98392ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன. அந்தவகையில், இன்று 33488 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 4343 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இன்று தான் முதல் முறையாக தமிழ்நாட்டில் 4 ஆயிரத்தை எட்டியுள்ளது கொரோனா பாதிப்பு. தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,392ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 2027 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 62560ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3095 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 56,021ஆக அதிகரித்துள்ளது. 42371 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று 57 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1321ஆக அதிகரித்துள்ளது.
 

click me!