சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்..!

By vinoth kumarFirst Published Jul 1, 2020, 10:55 AM IST
Highlights

சென்னையின் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டுள்ள நிலையில் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னையின் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டுள்ள நிலையில் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: சென்னை காவல் ஆணையராக இருந்த விஸ்வநாதன் காவல் துறை செயலாக்கம் ஏடிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக மகேஷ்குமார் அகர்வால் சென்னைக்கு புதிய காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ஐ.ஜியாக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு புதிய ஐ.ஜியாக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பிரேமானந்த் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி காவல் ஆணையராக இருந்த வரதராஜூ மாற்றப்பட்டு தஞ்சை டி.ஐ.ஜி., லோகநாதன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர் நகர காவல் ஆணையராக ஜி. கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மண்டல ஜ.ஜி.,யாக ஜெயராம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு ஏ.டி.ஜி.பி.,ரவி ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக கணேச மூர்த்தி நியமிக்கப்பட்டார். சென்னை போக்குவரத்து போலீஸ் கமிஷனராக கண்ணன் நியமிக்கப்பட்டார்.

சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக இருந்த அருண் சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். சென்னை காவல் துறை தலைமையக கூடுதல் ஆணையராக அமல்ராஜ் நியமனம். திருப்பூர் நகர காவல் ஆணையராக இருந்த சஞ்சய் குமார் சென்னை தொழில்நுட்ப ஐ.ஜி., ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சீருடை பணியாளர் தேர்வாணைய டிஜிபி யாக இருந்த சுனில் குமார் மாநில மனித உரிமை டிஜிபி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் வடக்கு மண்டல இணை ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

click me!