இந்த 4 சுங்கச்சாவடிகளின் கட்டணம் இன்று முதல் ரத்து... மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்..!

Published : Aug 30, 2021, 02:40 PM IST
இந்த 4 சுங்கச்சாவடிகளின் கட்டணம் இன்று முதல் ரத்து... மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்..!

சுருக்கம்

மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால் ராஜிவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது, 30ம் தேதியுடன் நிறுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருத்தார்.

சென்னை ராஜிவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால் ராஜிவ்காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை, மேடவாக்கம் சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது, 30ம் தேதியுடன் நிறுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருத்தார்.

இதனையடுத்து, இன்று முதல் OMR சாலையில் சுங்கச் சாவடி கட்டணம் ரத்து அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, கார், லாரி உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களின் ஓட்டுநர்கள் கட்டணம் செலுத்தாமல் இந்த 4 சுங்கச்சாவடிகளைக் கடந்து சென்றனர். இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த சுங்க சாவடியை நிரந்தரமாக நீக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
Chennai : சென்னைையே மாறப்போகுது.! பேருந்து – ரயில் கனெக்டிவிட்டி ரெடி.. இதை கவனிச்சீங்களா!