தமிழ்நாட்டில் இன்று உச்சபட்ச கொரோனா பாதிப்பு..! ஒரே நாளில் 3949 பேருக்கு தொற்று.. 2212 பேர் டிஸ்சார்ஜ்

Published : Jun 29, 2020, 06:30 PM IST
தமிழ்நாட்டில் இன்று உச்சபட்ச கொரோனா பாதிப்பு..! ஒரே நாளில் 3949 பேருக்கு தொற்று.. 2212 பேர் டிஸ்சார்ஜ்

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3949 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 86224ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3949 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 86224ஆக அதிகரித்துள்ளது. 
     
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டிருப்பதால், அதிகமான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. இன்று ஒரே நாளில் அதிகபாட்சமாக 3949 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 86224ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இன்றும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 2167 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 55969ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2212 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 47749ஆக அதிகரித்துள்ளது. 37331 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று 62 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1141ஆக அதிகரித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!
தங்கத்துடன் போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!