குட் நியூஸ்: தமிழ்நாட்டில் இன்று குறைந்த பாதிப்பு; அதிகபட்ச டிஸ்சார்ஜ்..!

By karthikeyan VFirst Published Jul 6, 2020, 6:11 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று மேலும் 3827 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,978ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் இன்று மேலும் 3827 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,978ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 34282 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 3827 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,978ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2ம் தேதியிலிருந்து 5ம் தேதி வரை நான்கு நாட்கள் தொடர்ச்சியாக தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதியாகிவந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை நான்காயிரத்திற்கு குறைவு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1747 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 70017ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது மட்டுமே ஒரே ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3793 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 66571ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று 61 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1571 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் பாதிப்பு கடந்த சில தினங்களாகவே கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் இன்று பாதிப்பு குறைந்திருக்கிறது. இன்று 4 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்புகளே உறுதியான நிலையில், அதிகபட்சமாக 3793 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பது நற்செய்தியாக அமைந்துள்ளது. 

click me!