தேர்வுத்துறை அதிரடி உத்தரவு... அதிர்ச்சியில் 10ம் வகுப்பு மாணவர்கள்.. குழப்பத்தில் ஆசிரியர்கள்..!

By vinoth kumarFirst Published Jul 5, 2020, 5:06 PM IST
Highlights

10,11-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 
 

10,11-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என கூறி இருந்தார்.

இந்நிலையில், 10ம் மற்றும் 11ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என அரசு பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். ஆகையால்,  அந்த மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது குறித்து கேள்வி எழுந்தது. இதனையடுத்து, தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமி ஒரு விளக்கத்தை அளித்தார். அதில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஒரு மாணவன் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் அந்த மாணவர் தேர்ச்சி பெற்றவராகவே கருதப்படுவார் என்றார். அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமி ஆணை பிறப்பித்திருந்தார். 

இந்நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் மற்றொரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், 10ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு முழுமையாக எழுதாமல் இருந்தால் ஆப்சென்ட் என குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்வு முடிவில் விடுப்பு என குறிப்பிட வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

click me!