2015 போல் ஏன் 2023 வெள்ளத்திற்கு தன்னார்வலர்கள் உதவவில்லையா? இதெல்லாம் தான் காரணமா?

By Ramya s  |  First Published Dec 7, 2023, 2:33 PM IST

2015 பெருவெள்ளத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் வந்து சென்னைக்கு உதவினர். 2023-ல் பெரிதாக தன்னார்வலர்களை களத்தில் பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.


மிக்ஜாம் புயல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள சென்னை வெள்ளம் 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை நினைவூட்டுகிறது. ஆனால் 2015 பெருவெள்ளத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான தன்னார்வலர்கள் வந்து சென்னைக்கு உதவினர். 2023-ல் பெரிதாக தன்னார்வலர்களை களத்தில் பார்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. எந்த என்.ஜி.ஓக்களும் களத்திற்கு வரவில்லை என்று தெரிகிறது. இந்த மனநிலைக்கு பின்வரும் சில விஷயங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

என்னென்ன காரணங்கள்?

Tap to resize

Latest Videos

undefined

சென்னையில் 2015-ம் ஆண்டு வெள்ளத்தின் போது ஒரு வாரத்திற்கு வெள்ளம் இருந்தது. எனவே வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு வாரம் உதவி கிடைக்காமல் திணறி வந்தனர். எனவே தமிழகம் முழுவதும் உதவிகள் வர தொடங்கியது.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

2051-ல் அரசு இயந்திரம் வேகமாக செயல்படவில்லை. முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் களத்தில் இல்லை. ஆனால் தற்போது முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இருக்கின்றனர். மேலும்

சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகளை தவிர கிட்டத்தட்ட 70% பகுதிகள் புயலுக்கு மறுநாளே இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன.  இந்த முறை தன்னார்வலர்கள் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

2015-ல் சமூக வலைதளங்களில் அதிகளவில் உதவிகள் கேட்கப்பட்டதால் தன்னார்வலர்கள் சேர்ந்து உதவி செய்து வந்தனர். ஆனால் இந்த முறை சமூக வலைதளங்களில் உதவிகள் கேட்கப்பட்டாலும் அமைச்சர்கள் அதிகாரிகளே நேரடியாக தலையிட்டு உதவி செய்து வருகின்ற்னர்.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் போன்ற இடங்களை தவிர மற்ற இடங்களில் மறுநாளே அலுவலகம் தொடங்கிவிட்டது. இதனால் மற்ற இடங்களில் வசிக்கும் மக்கள் பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த முறை சென்னையின் மைய பகுதி விரைவாகவே மீண்டு விட்டதால் சென்னை வெள்ளத்தில் இருந்து மீண்டது என்ற பொதுவான எண்ணம் உருவாகிவிட்டது. எனவே உதவி தேவை இல்லை என்ற கருத்து உருவாகிவிட்டது. தன்னார்வலர்கள் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

2015-ம் ஆண்டு 5 நாட்கள் வரை மின்சார வசதி இல்லை என்பதால் யாரும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் தன்னார்வலர்கள் உதவிக்கு வந்தனர். ஆனால் இந்த முறை மறுநாளே மின்சாரம் வந்துவிட்டதால் இயல்பு நிலை திரும்பியது. தவிர இந்த முறை பல நிறுவனங்கள் ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷனை வழங்கியதால் வீட்டிலிருந்தே வேலை செய்ய தொடங்கிவிட்டனர்.

 

புயல் நிவாரணம்.. தமிழகத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு.. சென்னைக்கான புதிய திட்டத்தையும் அறிவித்தார் அமித்ஷா..

எனினும் 4 நாட்களாகியும் இன்னும் பல புறநகர் பகுதிகளில் தண்ணீர் வடியாமல் உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!