பயங்கர அதிர்ச்சி... விருதுநகர் மாவட்டத்தில் மிரட்டும் ஆந்த்ராக்ஸ் வைரஸ்..!! வாயில் மூக்கில் ரத்தம் வடிந்து உயிரிழந்த 110 ஆடுகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 11, 2019, 1:47 PM IST
Highlights

உயிரிழந்த  ஆடுகளைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்து பார்த்தனர்.  அதில் ஆந்த்ராக்ஸ் நோய் ஆடுகளை பாதித்திருப்பது தெரியவந்தது.  ஆடுகள் உயிரிழக்க ஆந்த்ராக்ஸ் வைரஸ் காரணமென தெரிந்ததையடுத்து   ஆட்டு மந்தையில் உள்ள மற்ற  ஆடுகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

கடந்த ஒரு வாரத்தில் ஒருவருக்கே சொந்தமான ஆட்டுக்கிடையில் இருந்த  சுமார் 110 ஆடுகள் பயங்கர வைரஸ்தாக்குதலால்  உயிரிழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வேகமாக பரவி வரும் ஆந்த்ராக்ஸ் நோய்க்கு அந்த ஆடுகளும்  உயிரிழந்திருப்பது பின்னர் நடைபெற்ற கால்நடை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.   ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் ஆட்டுக்கிடை நடத்தி வருபவர் ராமர்,  இவரின் மந்தையில் சுமார்  200க்கும் மேற்பட்ட ஆடுகள் இருந்தன.  இந்நிலையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி அவரின் கிடையில் இருந்த ஆடுகள்,  ஒன்றன்பின் ஒன்றாக  மயங்கி விழுந்து உயிரிழந்தன. 

ஆடுகளின் வாயில் நுரை தள்ளிய நிலையில் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்து  இறந்தன.  இதனையடுத்து விவசாயி ராமர் கால்நடை துறைக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடைத்துறை உதவி இயக்குனர் சஞ்சீவி ராஜா தலைமையிலான குழு, உயிரிழந்த  ஆடுகளைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்து பார்த்தனர்.  அதில் ஆந்த்ராக்ஸ் நோய் ஆடுகளை பாதித்திருப்பது தெரியவந்தது.  ஆடுகள் உயிரிழக்க ஆந்த்ராக்ஸ் வைரஸ் காரணமென தெரிந்ததையடுத்து   ஆட்டு மந்தையில் உள்ள மற்ற  ஆடுகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

கடந்த 5 ஆம் தேதி முதல் நேற்று வரை,  சுமார் 110 ஆடுகள்  இறந்துள்ளன. இந்நிலையில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ள விவசாயி ராமர், உயிரிழந்த  ஆடுகளுக்கு அரசு தரப்பிலிருந்து  நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுடன்,  கால்நடைகளை பாதுகாக்க கிராமபுறங்களில்  முறையான  கால்நடை சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். 
 

click me!