சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன்(51) என்பவர் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசியில் முன்பதிவு செய்துள்ளார்.
ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன்(51) புகார் அளித்துள்ளார்.
சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன்(51) என்பவர் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசியில் முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து பயண சீட்டை ரத்து செய்வதற்காக ஐஆர்சிடிசி இணையதளத்தில் For Help என்று பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பயணச்சீட்டு கட்டணத்தை ஸ்ரீதரன் கேட்டுள்ளார்.
undefined
இதையும் படிங்க: பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
அப்போது வங்கிக் கணக்கு விவரங்கள் அளித்த சில நிமிடங்களிலேயே ஸ்ரீதரன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் எடுக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீதரன் தியாகராய நகர் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: கடுப்பான தம்பி! காதலன் தலையை தனியாக துண்டித்து.. அக்கா கழுத்தறுத்து படுகொலை! நடந்தது என்ன?
இந்த புகாரின் பேரில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பதிவிடப்பட்டு இருந்த மொபைல் நம்பர், ரயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என்பது குறித்துபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.