அரியலூரில் சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஹார்டின் விட்ட வாலிபர் போக்சோவில் கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியின் புகைப்படத்தை எடிட் செய்து தவறாக பயன்படுத்திய வாலிபரை காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

young man arrested pocso act who edit a minor girl photo in ariyalur district vel

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரக்குடி கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 23). இவர் உத்திரக்குடி கிராமத்தில் உள்ள 16 வயது சிறுமியின் கண்களை சமூக வலைதளங்களில் தவறாக பதிவு செய்துள்ளார். இது குறித்து  சிறுமியின் பெற்றோர் நவநீதகிருஷ்ணனின் பெற்றோர்களிடம் கூறி கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நவநீதகிருஷ்ணன் மீண்டும் அந்த 16 வயது சிறுமியின் முதல் எழுத்தையும், தன்னுடைய பெயரை கிருஷ்ணன் என்று கூப்பிடுவதால் அதில் உள்ள முதல் எழுத்தான கே யுடன் சேர்த்து எடிட்டிங் செய்து குரூப் ஒன்றை ஆரம்பித்து அதில் 16 வயது சிறுமியின் முகத்தை ஹார்ட்டில் வைத்து டிசைன் செய்து அதை தன்னுடைய போட்டோவுடன் இணைத்து, தான் பயன்படுத்தி வரும் குரூப்பில் போட்டிருந்ததை தெரிந்து கொண்ட சிறுமி பெற்றோர்களிடம் கூறியுள்ளார். 

நாகையில் மாடு முட்ட வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் பேருந்தில் சிக்கி பலி

Latest Videos

இது சிறுமியின் பெற்றோர் நவநீதகிருஷ்ணனின் பெற்றோர்களிடம் கூறி கண்டிக்க அறிவுறுத்தியுள்ளனர். நவநீதகிருஷ்ணனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால்  நவநீதகிருஷ்ணன் ஆத்திரமடைந்து சிறுமியின் வீட்டுக்கு சென்று உங்களை குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சிறுமியின் எதிர்காலத்தினை அழித்து வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி விடுவேன் என மிரட்டி, தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.  

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் நவநீதகிருஷ்ணனை அழைத்து செல்போனில் உள்ள பதிவுகளை பார்த்து உறுதி செய்ததுடன் நவநீதகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image