சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் என ஏற்கனவே வெற்றி பெற்ற 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். முன்னதாக சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட கடலூரில் நேற்று நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், சிவசங்கர், சி.வி.கணேசன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
“திருமாவளவனின் வெற்றி காலத்தின் கட்டாயம்” கடலூரை அதிரவைத்த திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள்
undefined
இதனைத் தொடர்ந்து திருமாவளவன் இன்று தனது வேட்பு மனுவை அரியலூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஆனி மேரி ஸ்வர்னாவிடம் அமைச்சர்கள் சிவசங்கர், பன்னீர்செல்வம் உள்பட படை சூழ வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆட்டு குட்டியை பரிசாக வழங்கிய ஐடி விங் நிர்வாகி
வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக திருமாவளவன் தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் உள்ள தனது குல தெய்வமான மாயவன் குலதெய்வ கோவிலுக்கு நேரில் சென்று வழிபாடு மேற்கொண்டார். அங்கு வேட்பாளர் திருமாவளவனுக்கு மாலை அணிவித்தும், தலையில் பரிவட்டம் கட்டியும் கோவில் பூசாரி வரவேற்பு அளித்தார். கோவிலில் சிறப்பு வழிபாட்டை முடித்துக் கொண்டு திருமா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.