ஜெயங்கொண்டம் அருகே அரசு மதுபான கடையை அதன் உரிமையாளர் பூட்டு போட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மனைவி கமலிக்கண்ணு. இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை ஒப்பந்தத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதன் அருகே கமலிக்கண்ணு அவரது சொந்த இடத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
undefined
இதனிடையே கமலிக்கண்ணு பெட்டி கடையில் சட்டவிரோதமாக பார் நடத்தி வருவதாகவும், பதுக்கி வைத்து மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டி கடை அருகே வீட்டில் இருந்த இருவரை போலீசார் விசாரணைக்காக மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சென்னை - நாகர்கோவில் - சென்னை; வந்தேபாரத் ரயிலை தினமும் இயக்க பயணிகள் கோரிக்கை
இதனால் ஆத்திரம் அடைந்த கமலிக்கண்ணு கைது செய்த இருவரையும் விடுவிக்க வலியுறுத்தியும், அரசு டாஸ்மாக் கடையை காலிசெய்ய வலியுறுத்தியும் அரசு மதுபான கடையை அரசு ஊழியர்களை உள்ளேயே வைத்து கடையை பூட்டினார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்சுருட்டி போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி கமலிக்கண்ணு மீது டாஸ்மாக் ஊழியர்கள் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Covid JN.1: மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று; சென்னையில் ஒருவர் பலி
மேலும் இது குறித்து கமலிக்கண்ணு கூறும்போது அரசு மதுபான கடையை வைக்க அனுமதித்த போது, தனது இடத்திற்ல் பெட்டிக்கடை வைப்பதற்கு அனுமதி கேட்டதாகவும், அனுமதி கொடுத்ததால் கடை வைக்க அனுமதித்தேன், ஆனால் பொய்யான காரணங்களை கூறி வீட்டிற்கு விருந்தாளியாக வந்த தனது உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். எனவே கைது செய்தவர்களை விடுவிக்க கூறியும், கடையை காலி செய்ய வேண்டும் என கூறினார். மேலும் அவர்களை விடுவிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என எச்சரிக்கை விடுத்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.