இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள் இன்று - திருமாவளவன் பேச்சு

Published : Apr 19, 2024, 05:40 PM IST
இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள் இன்று - திருமாவளவன் பேச்சு

சுருக்கம்

தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள் இன்று என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌ பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம். நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டு என்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது. ‌இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ 

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்; கள்ள ஓட்டு போட வந்த மர்ம நபர்கள் விரட்டி அடிப்பு

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ‌தமிழ்நாட்டில் 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெறும். கூட்டணி பலம், திமுக அரசின் மூன்று ஆண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. 

என்ன ஆபிசர் இதெல்லாம்? வாக்காளர்களுக்காக அதிகாரிகளுடன் மல்லுகட்டிய அண்ணாமலை

தமிழ்நாட்டின் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடித்த முக்கிய அம்சங்கள்!
எதிரிக்கும் வரக்கூடாத சோகம்; மாணவியின் கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த தந்தை, சகோதரி