ஆடு மேய்க்க சென்ற இடத்தில் பயங்கரம்! மூதாட்டியின் காலை கடித்து குதறிய முதலை.. ரத்தம் சொட்ட சொட்ட கதறல்!

By vinoth kumar  |  First Published Apr 28, 2024, 8:27 AM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமம் கொள்ளிட ஆற்றின் கரையோரத்தில்  பெரும்பாலான மக்கள் கால்நடைகளை  மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். 


ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் கரையோரம் ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை முதலைக் கடித்ததில் படுகாயமடைந்து அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமம் கொள்ளிட ஆற்றின் கரையோரத்தில்  பெரும்பாலான மக்கள் கால்நடைகளை  மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். அதேபோல் வழக்கம்போல் நேற்று மாலை நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் மனைவி சின்னம்மா (70) என்பவர் மேய்ச்சலுக்காக தனது ஆடுகளை ஓட்டி சென்றுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: அடுத்த 5 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள் மக்களே.. கூடவே மழைக்கும் வாய்ப்பு இருக்காம்.. வானிலை மையம்!

அப்போது அப்பகுதியில் இளைப்பாற கரையில் ஒதுங்கி படுத்திருந்த முதலை எதிர்பாராத விதமாக திடீரென மூதாட்டியின் காலை பிடித்து இழுத்து கடித்து குதறியது. இதில் அவருக்கு இடது கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து சத்தம் போட்டு கதறியுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் சின்னம்மாவின் அலறல் சத்தம் கேட்டு  ஓடி வந்து அவரை முதலையின் பிடியில் இருந்து பத்திரமாக மீட்டனர். 

இதையும் படிங்க:  பட்டப்பகலில் கோயம்பேடு மேம்பாலத்தில் ஆணும், பெண்ணும் இப்படி பண்ணலாமா? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

முதலை கடித்ததில் அதே இடத்தில் மயங்கிய நிலையிலிருந்து மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மூதாட்டியை முதலை கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!