வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள புத்தகத்தை வாங்க வேண்டும்! அமைச்சர் சிவசங்கர் பேச்சு!

By Dinesh TG  |  First Published Apr 24, 2023, 10:36 AM IST

அரியலூரில் புத்தகத் திருவிழாவை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அனைவரும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு புத்தகங்களை வாங்க வேண்டும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்
 


அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 7வது ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்கியது. இதனை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார்.

அப்போது இவர்தான் கலைஞர், ஈரோடும் காஞ்சியும், கலைஞரின் ஒரு மனிதன் ஒரு இயக்கம், தந்தை பெரியாரின் பார்ப்பன‌ எதிர்ப்பு ஏன் எதற்கு, திராவிட இயக்கத்தின் தலைவர் சி.நடேசனார், திராவிட தளபதி ஏ.டி.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 15 நூல்களை வாங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார். புத்தக வாசிப்பு அனைவரையும் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். இதனால் .அனைத்து பகுதிகளிலும் உள்ள நூலகங்களை புதுப்பிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.



அனைவரும் படிக்க வேண்டும் அதற்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்காக புத்தகங்களை வாங்க வேண்டும். எனவே மாவட்ட மக்கள் பெருமளவு திரண்டு வந்து புத்தகங்கள் வாங்க வேண்டும். எனக் கூறினார்

இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, அரியலூர் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு நிர்வாகிகள், பல்துறை அரசு உயர் அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Tap to resize

Latest Videos

படித்தது சென்னை ஐஐடியில்.. துபாயில் கைநிறைய சம்பளம்.. காதலிக்காக திருடனாக மாறிய நபர்..

புத்தகத் திருவிழாவில் தொல்லியல் துறை மகளிர் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகளும் சிறுகதைகள் கவிதைகள் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான பல்வேறு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட புத்தகங்கள் என ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் 74 அரங்குகளில் இடம்பெற்றுள்ளன இதற்கான இந்த புத்தகத் திருவிழா மே 3ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!