அரியலூரில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

By Velmurugan s  |  First Published May 13, 2023, 1:16 PM IST

ஜெயங்கொண்டம் அருகே கோடங்குடி கிராமத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் 50க்கும் மேற்பட்டோர் குழந்தைகளை தோளில் சுமந்து தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் 12 வருடங்களுக்கு பிறகு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் நடைபெற்ற நிலையில் கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்ற ஆண்டு கோவில் குடமுழுக்கு நடைபெற்றது.  

Latest Videos

இதனைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் தீமிதி திருவிழா நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டி கடும் விரதம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று தீ குழி தயார் செய்து தீ மூட்டப்பட்டது. 

சேலத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவரை துரிதமாக விரைந்து வந்து காப்பாற்றிய காவலர்

பின்னர் மாலை நேரத்தில் பூங்கரகம் ஏந்தி பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என முழக்கங்களை எழுப்ப சுமார் 50க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகளை தோளில் சுமந்தபடி நேர்த்தி கடன் செலுத்தினர்.

click me!