பூவோடும், காயோடும் இருக்கும் முருங்கையை அடியோடு அழித்த விவசாயி; போதிய விலை கிடைக்காததால் அதிருப்தி

By Velmurugan sFirst Published Sep 14, 2023, 7:27 PM IST
Highlights

அரியலூர் மாவட்டத்தில் முருங்கைக்கு போதிய விலை கிடக்காததால் விவசாயி ஒருவர் தனது விளை நிலத்தில் பயிரிட்டிருந்த முருங்கை மரங்களை டிராக்டர் கொண்டு அழித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி செய்திருந்தார். தற்போது முருங்கை பூவும், பிஞ்சுமாய் காய்த்து வருகிறது. கூலி ஆட்களை கொண்டு  பறிக்கப்பட்ட முருங்கைக்காயை விற்பனைக்காக கும்பகோணம் சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளார் விவசாயி குமார். அங்கு கடந்த சில நாட்களாக இரண்டு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனையாகி உள்ளது. 

முருங்கைக்காயின் விலை அதிகரிக்கும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பறிக்கப்பட்ட முருங்கைக்காயை சந்தைக்கு கொண்டு சென்ற விவசாயி குமாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது ஒரு கிலோ 2 ரூபாய் 3 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காயை கூட வாங்குவதற்கு ஆள் இல்லாத நிலையே காணப்பட்டது. 

காவிரி விவகாரம்; முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை கிழித்து வாட்டாள் நாகராஜ் அட்டூழியம் - வேடிக்கை பார்த்த போலீஸ்

இதனால் விரக்தி அடைந்த விவசாயி முருங்கை வயலுக்கு வந்து பறிக்கும் கூலிச் செலவுக்கு கூட முருங்கைக்காய் விற்பனையாகவில்லையே என விரக்தியில் பூவும் பிஞ்சுமாய் காயுமாக இருந்த முருங்கையை டிராக்டர் கொண்டு அழித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!