2019 உலக கோப்பையில் யுவராஜ் சிங்..?

Published : Oct 11, 2018, 01:07 PM IST
2019 உலக கோப்பையில் யுவராஜ் சிங்..?

சுருக்கம்

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் ஆடிய யுவராஜ் சிங், அதன்பிறகு யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.   

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியதுதான், யுவராஜ் சிங் கடைசியாக ஆடிய சர்வதேச போட்டி. அதன்பிறகு யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். 

அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் யுவராஜ் சிங் ஆடவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் அண்மையில் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலும் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

தற்போதைய சூழலில் இளம் வீரர்கள் அதிகமாக உள்ளனர். இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே இனிமேல் யுவராஜ் சிங்கிற்கு இனிமேல் அணியில் இடம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது. 4, மற்றும் 6வது இடங்களில் ஆட சரியான வீரர்களுக்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. 

ஏற்கனவே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஆதிக்கம் செலுத்தி, இந்திய அணிக்கு பல இக்கட்டான நேரங்களில் சிறப்பாக ஆடி வெற்றிகளை குவித்து கொடுத்துள்ள யுவராஜ் சிங், தனக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். விஜய் ஹசாரேவில் சிறப்பாக ஆடிவரும் யுவராஜ் சிங், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு உடலளவிலும் மனதளவிலும் மிகவும் வலிமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

தனது உடற்தகுதி குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்மையில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை யுவராஜ் சிங் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இருக்கும் பிரச்னையால், 2019 உலக கோப்பையில் இந்திய அணியில் மீண்டும் தான் ஆடும் நம்பிக்கையில் உள்ளார் யுவராஜ் சிங். ஆனால் அவர் மீண்டும் இந்திய அணியில் ஆடுவது அவர் கையில் இல்லை. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம். 
 

PREV
click me!

Recommended Stories

அபிஷேக் சர்மாவின் ருத்ரதாண்டவத்தை தடுக்க அதிரடி புயலை களம் இறக்கும் நியூசி..
T20 World Cup 2026: வங்கதேச அணி இந்தியா வருவதை தடுத்தது பாகிஸ்தான்.. பிசிசிஐ பகீர் குற்றச்சாட்டு!