உங்களுக்கு வேணும்னா அப்படி சொல்லி கேளுங்க தம்பி!! ஏன் மத்தவங்கள காரணம் காட்டுறீங்க? கோலியை தெறிக்கவிட்ட காம்பீர்

By karthikeyan VFirst Published Oct 11, 2018, 12:05 PM IST
Highlights

வெளிநாட்டு தொடர்களுக்கு வீரர்களின் மனைவிகள் தொடர் முழுதும் வீரர்களுடன் தங்க அனுமதிக்கும் வகையில் விதிகளை திருத்துமாறு பிசிசிஐ-யிடம் கோலி கோரிக்கை விடுத்தது தொடர்பாக கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

வெளிநாட்டு தொடர்களுக்கு வீரர்களின் மனைவிகள் தொடர் முழுதும் வீரர்களுடன் தங்க அனுமதிக்கும் வகையில் விதிகளை திருத்துமாறு பிசிசிஐ-யிடம் கோலி கோரிக்கை விடுத்தது தொடர்பாக கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டு தொடர்களின் போது வீரர்கள் மனைவி, குழந்தைகளை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் குடும்பங்களுடன் வீரர்கள் இருப்பது, ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொடர்களின் போது 2 வாரங்களுக்கு மேல் வீரர்களின் மனைவிகள் அவர்களுடன் தங்கக்கூடாது.

இந்நிலையில், வெளிநாட்டு தொடர்களின்போது வீரர்களின் மனை, குழந்தைகள், உதவியாளர்கள் ஆகியோரை தொடர் முழுவதும் வீரர்களுடன் தங்க அனுமதிக்குமாறு விதிகளில் மாற்றங்களை செய்ய வேண்டும் என கேப்டன் விராட் கோலி, பிசிசிஐ உயரதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வீரர் கவுதம் காம்பீர், வெளிநாட்டு தொடர்களில் மனைவியை தங்களுடன் தங்கவைத்து கொள்வது என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு. எல்லாருமே தங்களுடன் தங்கவைத்துக்கொள்ள விரும்புவார்கள் என்று கூறிவிடமுடியாது. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அது அவர்களின் ஆட்டத்தை பாதிக்காத வரையில் பிரச்னையில்லை. ஆனால் எதுவாக இருந்தாலும் இந்திய அணிக்கு பாதிப்பாக அமைந்துவிடக்கூடாது என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.  
 

click me!