யூத் ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஜூனியர் மகளிர், ஆடவர் அணிகள் அசத்தல் வெற்றி...

 
Published : Apr 26, 2018, 11:17 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
யூத் ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய ஜூனியர் மகளிர், ஆடவர் அணிகள் அசத்தல் வெற்றி...

சுருக்கம்

Youth Olympic Hockey Indian Junior Women and Men team won ...

யூத் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டியின் தொடக்கச் சுற்றில் இந்திய ஜூனியர் மகளிர், ஆடவர் அணிகள் அசத்தல் வெற்றி அடைந்துள்ளன.

யூத் ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப் போட்டி தாய்லாந்தில் நடைபெறுகிறது. இதில், மகளிர் அணி 14-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரையும், ஆடவர் அணி 25-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு அசத்தலாக முன்னேறின.
 
அதன்படி, இந்திய மகளிர் அணியில் சங்கீதா, மும்தாஜ், லால்ரெம்சியாமி, இஷிகா செளத்ரா, தீபிகா ஆகியோர் சிறப்பாக ஆடி வெற்றிக்கு வழிவகுத்தனர்.

அதேபோன்று, ஆடவர் போட்டியில் இந்திய அணி தரப்பில் முகமது அலிஷான், ராகுல்குமார், ரவிச்சந்திரன், விவேக் சாகர், ஆகியோர் சிறப்பாக ஆடி அசத்தினர்.
 
மகளிர் அணி அடுத்த போட்டியில் கொரியாவையும், ஆடவர் அணி ஜப்பானையும் எதிர்கொள்கின்றன. இந்தப் போட்டியில் வெல்லும் அணிகள் அர்ஜென்டிவான் பியனோஸ் அயர்ஸ் நகரில் நடைபெறவுள்ள யூத் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

உள்நாட்டு கிரிக்கெட்டின் கிங்..! இந்திய 'ஸ்டார்' ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணி பரிதாபம்..! முதலிடம், இரண்டாம் இடம் எந்த அணி?