நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நான் வருவேன்... வாக்கு மாறாத மோடி.. நெகிழ்ந்து பேசிய ஸ்டாலின்.

Published : Jul 28, 2022, 08:31 PM ISTUpdated : Jul 28, 2022, 09:44 PM IST
நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நான் வருவேன்... வாக்கு மாறாத மோடி.. நெகிழ்ந்து பேசிய ஸ்டாலின்.

சுருக்கம்

நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நான் கலந்து கொள்வேன் என பிரதமர் மோடி கூறியிருந்ததாகவும், அதேபோல அவர் கலந்து ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  நெகிழ்ச்சியுடன் கூறினார்.   

நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நான் கலந்து கொள்வேன் என பிரதமர் மோடி கூறியிருந்ததாகவும், அதேபோல அவர் கலந்து ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்  நெகிழ்ச்சியுடன் கூறினார். 

44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:- நேரு விளையாட்டு அரங்கத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் மிக எழுச்சியோடு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது,  இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் நாளாக இது அமைந்துள்ளது, செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்த தமிழ்நாட்டிற்கு வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமை அளிக்கிறது, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ள செஸ் விளையாட்டு வீரர்களை வரவேற்கிறேன்.

நானே பிரதமரை நேரில் சென்று அழைக்கலாம் என திட்டமிட்டிருந்தேன், ஆனால் இடையில் எனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக நேரில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  நலம் விசாரிப்பதற்காக மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடர்பு கொண்டார்கள், என்னை நலம் விசாரித்த அவரிடத்தில் எனது நிலையை விளக்கினேன், அவர் சொன்னார் பெருந்தன்மையோடு சொன்னார்,  "  நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் நான் நிச்சயம் கலந்து கொள்வேன்" என்றார்.

இதையும் படியுங்கள்:  தமிழர்கள் போர் மரபு கொண்டவர்கள்... கீழடியில் தந்தத்தினால் ஆன காய்கள்.. மார்தட்டிய முதல்வர் ஸ்டாலின்.

இந்த விழா இந்தியாவிற்கு பெருமை தரக்கூடிய விழா என்றும் பிரதமர் குறிப்பிட்டார், அந்த வகையில் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் இங்கே வருகை புரிந்திருக்கிறார்கள், அவர் குஜராத் பிரதமராக இருந்தபோது 20 ஆயிரம் வீரர்களுடன் செஸ் போட்டியை நடத்தியவர், இந்த போட்டி ரஷ்யாவில் நடப்பதாக இருந்தது. கொரோனா காரணமாக ரஷ்யாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது, எந்த நாட்டில் நடத்தலாம் என ஆராய்ந்த போது இந்தியாவில் நடக்க வாய்ப்பு வரும் பட்சத்தில் அதை தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பு தர வேண்டும் என நாம் கோரினோம். இந்நிலையில் தமிழகத்தில் நடத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: செஸ் ஒலிம்பியாட் லோகோ சதுரங்க குதிரைக்கு தம்பி என்று எதற்கு பெயர்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!

இந்த விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக 18 துணை குழுக்களை உருவாக்கினோம், இந்த போட்டியை நடத்த 18 மாதங்கள் ஆகும் ஆனால் வெறும் நான்கே மாதங்களில் அனைத்து ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன், இதற்கு காரணமான இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டுத் துறையைச் சார்ந்த அனைத்து அதிகாரிகள், இதற்கு துணை நின்று அனைத்து துறை அதிகாரிகளையும் இப்போது  மனதார வாழ்த்துகிறேன். நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய துணைக் கண்டத்தில் முதல் முறையாக ஆசியக் கண்டத்தில் மூன்றாவது முறையாகவும் இந்த செஸ் போட்டிகள் நடந்து வருகிறது. தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது, மாமல்லபுரத்தில் போட்டிகள் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சதுரங்கப்பட்டினம் என்ற ஊர் மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ளது. சென்னைப் பட்டினம் என்ற மெட்ராஸை சொல்வதுபோல சதுரங்க பட்டிணத்தை செட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போன்று வாய்ப்புகள் தமிழகத்திற்கு தொடர வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?