உலக கோப்பை லீக் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அசத்திய மித்தாலி ராஜ்… இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய சாதனை…

Asianet News Tamil  
Published : Jun 25, 2017, 06:38 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
உலக கோப்பை லீக் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் அசத்திய மித்தாலி ராஜ்… இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய சாதனை…

சுருக்கம்

world women criket...India win

இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில்அபார வெற்றி  பெற்றது. மிதாலி ராஜ், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 7வது அரைசதம் அடித்து, உலக சாதனை படைத்தார்.

பிரிட்டன்  மற்றும் வேல்சில் 11 வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள், லீக் முறையில் இப்போட்டியில் மோதுகின்றன.

நேற்று டெர்பையில் நடந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ்  வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நைட் பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு பூணம் ராத், ஸ்மிரிதி மந்தனா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ஒரு பக்கம் பூணம் ராத் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அதிரடியாக ரன்கள் குவித்தார் மந்தனா.

.ஜென்னி கன் பந்தில் பவுண்டரி அடித்த மந்தனா, ஒருநாள் அரங்கில் 6வது அரைசதம் அடித்தார். இந்த ஜோடியில் அசத்தல் ரன் குவிப்பு காரணமாக இந்திய அணி 20.4வது ஓவரில் 100 ரன்களை எட்டியது.

முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்த போது, 72 பந்துகளில் 90 ரன் எடுத்த மந்தனா அவுட்டானார். பின் வந்த கேப்டன் மிதாலி ராஜ், வேகமாக ரன்கள் சேர்த்தார்.

இதனிடையே மிதாலி ராஜ் ஒரு நாள் அரங்கில் 47வது அரைசதம் எட்டினார். தவிர, ஒருநாள் அரங்கில் தொடர்ந்து 7 அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். கடைசியில் இவர் 71 ரன்னுக்கு அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்த இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் மந்தனா தேர்வு செய்யப்பட்டார்.

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Yuzvendra Chahal : ரோட்ல இப்படித்தான் பண்ணுவீங்களா?" - சர்ச்சையில் சிக்கிய யுஸ்வேந்திர சாஹல்? வைரலாகும் வீடியோ!