
உலக ஹாக்கி லீக் அரையிறுதிப் போட்டியில் ஐந்தாவது முதல் எட்டாவது இடத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதவுள்ளன.
உலக ஹாக்கி லீக் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் காலிறுதியில் இந்தியா, மலேசியாவிடம் தோற்றது. பாகிஸ்தான், ஆர்ஜென்டீனாவிடம் தோற்றது. இதையடுத்து ஐந்தாவது முதல் எட்டாவது இடத்துக்கான ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் இன்று மோதுகின்றன.
குரூப் சுற்றில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியிருக்கிறது. அதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு களமிறங்கலாம்.
அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றில் படுதோல்வி கண்டதற்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கலாம்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெல்லும்பட்சத்தில், நாளை நடைபெறும் 5 மற்றும் 6-வது இடத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் விளையாட தகுதி பெறும்.
ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய அணி, 5-ஆவது இடத்தைப் பிடிக்க கடுமையாகப் போராட வேண்டும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.