மகளிர் உலகக் கோப்பை: எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மே.தீவுகளை துவம்சம் செய்தது ஆஸ்திரேலியா…

Asianet News Tamil  
Published : Jun 27, 2017, 09:42 AM ISTUpdated : Sep 19, 2018, 12:48 AM IST
மகளிர் உலகக் கோப்பை: எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மே.தீவுகளை துவம்சம் செய்தது ஆஸ்திரேலியா…

சுருக்கம்

Women World Cup Australia beaten the west indies by eight wickets

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை துவம்சம் செய்தது.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நான்காவது ஆட்டம் இங்கிலாந்தின் டான்டனில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 47.5 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 46 ஓட்டங்களும், கேப்டன் டெய்லர் 45 ஓட்டங்களும், சி.என்.நேஷன் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியத் தரப்பில் பெர்ரி மூன்று விக்கெட்டுகளையும், ஜொனாசென், பீம்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மூனே - போல்டான் இணை முதல் விக்கெட்டுக்கு 30.1 ஓவர்களில் 171 ஓட்டங்கள் குவித்து அதிரடி காட்டினர்.

மூனே 85 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வந்த கேப்டன் லேனிங் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோதும், போல்டான் சதமடித்தார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 38.1 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

போல்டான் 116 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்களும், பெர்ரி 5 ஓட்டங்களும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் டெய்லர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Sanju Samson: பேட்டிங்கில் மட்டுமல்ல; கல்லா கட்டுவதிலும் 'சேட்டன்' கில்லாடி.. அசர வைக்கும் சஞ்சு சாம்சன் சொத்து மதிப்பு!
Yuzvendra Chahal : ரோட்ல இப்படித்தான் பண்ணுவீங்களா?" - சர்ச்சையில் சிக்கிய யுஸ்வேந்திர சாஹல்? வைரலாகும் வீடியோ!