
சர்வதேச டென்னிஸ் (ஏடிபி) தரவரிசையில் ஆடவர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே முதலிடமும், பெண்கள் தரவரிசையில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் முதலிடமும் பிடித்துள்ளனர்.
இலண்டனில் நடைபெற்ற குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியதால் மரின் சிலிச் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
பிரிட்டனின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஸ்பெயினின் ரஃபேல் நடால் இரண்டாம் இடத்தையும், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா மூன்றாம் இடத்தையும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நான்காம் இடத்தையும், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
மரின் சிலிச் ஆறாவது இடத்திலும், கனடாவின் மிலோஸ் ரயோனிச் ஏழாவது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் எட்டாவது இடத்தையும், ஜப்பானின் கெய் நிஷிகோரி ஒன்பதாவது இடத்தையும், பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்கா பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
மகளிர் தரவரிசையைப் பொறுத்தவரையில் செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவா 4 இடங்கள் முன்னேறி 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இடது கை வீராங்கனையான பெட்ரா கிவிட்டோவா, கடந்த டிசம்பரில் மர்மநபர் கத்தியால் குத்தியதில் இடது கையில் பலத்த காயமடைந்தார். அதிலிருந்து விரைவாக மீண்ட கிவிட்டோவா, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பர்மிங்காம் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டுள்ளார்.
ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் முதலிடத்திலும், ருமேனியாவின் சைமோனா ஹேலப் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா மூன்றாம் இடத்திலும், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் நான்காம் இடத்திலும், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாைந்தாம் இடத்திலும் உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.