விம்பிள்டன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, ஜோஹன்னா கோன்டாவோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறிவர்கள் இதோ…

Asianet News Tamil  
Published : Jul 06, 2017, 09:37 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
விம்பிள்டன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, ஜோஹன்னா கோன்டாவோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறிவர்கள் இதோ…

சுருக்கம்

Wimbledon Tennis Andy Murray and Johannes Gonda are enter into next rounds

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, ஜோஹன்னா கோன்டா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றிற்கு முன்னேறி அசத்தினர்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் இலண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரே, ஜெர்மனியின் டஸ்டின் பிரெளனை எதிர்கொண்டார்.

விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் முர்ரே 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.

இதனையடுத்து அவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை எதிர்கொள்கிறார்.

இதேபோல், உலகின் 9-ஆம் நிலை வீரரான ஜப்பானின் கெய் நிஷிகோரி, உக்ரைனின் செர்கி ஸ்டகோவ்ஸ்கி மோதியதில் 6-4, 6-7(9), 6-1, 7-6(6) என்ற செட் கணக்கில் நிஷிகோரி வென்றார்.

அவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 18-ஆம் நிலை வீரரான ஸ்பெயினின் பெளதிஸ்டா அகுட்டை சந்திக்கிறார்.

மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில் பிரான்ஸின் ஜோ வில்ஃப்ரைடு சோங்காவும், இத்தாலியின் சைமன் போலேலியும் மோதினர். இதில், 6-1, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் சைமன் போலேலியை வீழ்த்தினார் சோங்கா.

இதனிடையே, மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஒன்றில் குரோஷியாவின் டோனா வெகிச்சை 7-6(4), 6-4, 10-8 என்ற செட் கணக்கில் வென்றார் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா.

அவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிரீஸின் மரியா சக்காரியை சந்திக்கிறார்.

இதேபோல், உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் கியாங்கை வீழ்த்தினார்.

அவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானின் நவோமி ஒஸாகாவை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் 8-ஆம் நிலை வீராங்கனையான ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை வீழ்த்தினார்.

அவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் குரோஷியாவின் அனா கோன்ஜுவை சந்திக்கிறார்.

இதேபோல் உலகின் 15- ஆம் நிலை வீராங்கனை எலினா வெஸ்னினாவை 6- 4, 6- 4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா.

அவர் தனது காலிறுதியில் பிரிட்டனின் ஹீத்தர் வாட்சனை சந்திக்கிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Hardik Pandya Life: Mumbai Indians கேப்டன் ஹர்திக் பாண்டியா: 9-ஆம் வகுப்பு வரை படிப்பு..140 கோடி சொத்து;வியக்க வைக்கும் வாழ்க்கை!
MS Dhoni Fear: கேப்டன் கூல்-க்கு இவ்வளவு பயமா? - ஊசி என்றாலே தெறித்து ஓடும் தோனி..