
ஃபிஃபா சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 105-வது இடத்தல் நீடிக்கிறது.
இந்தாண்டு தொடக்கத்தில் 129-வது இடத்தில் இருந்த இந்திய அணி, ஜூலை மாதத்தில் முதல் 100 இடங்களுக்குள்ளாக முன்னேறி, 96-வது இடத்தை அடைந்தது. இது, இந்தியாவின் 2-வது அதிகபட்ச தரவரிசையாகும். கடந்த 1996 பிப்ரவரியில் இந்தியா 94-வது இடத்தில் முன்னேறியதே உச்சபட்சம்.
தற்போது ஃபிஃபா சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 105-வது இடத்தில் நீடிக்கிறது. தரவரிசை காலக் கட்டத்தில் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத நிலையில் 320 புள்ளிகளுடன் கடந்த மாதம் முதல் அதே இடத்தில் நிலைக்கிறது இந்தியா.
ஃபிஃபா தரவரிசை பட்டியலில் ஆசிய நாடுகளின் வரிசையில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது. 14-வது இடத்தில் கத்தாரும், 16-வது இடத்தில் ஜோர்டானும் உள்ளன.
ஆசிய நாடுகள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஈரான், சர்வதேச அளவில் 32-வது இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் 38-வது இடத்திலும், ஜப்பான் 57-வது இடத்திலும் உள்ளன.
சர்வதேச வரிசையில் முதல் அணியாக ஜெர்மனி நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.