ஐசிசி மகளிர் அணியில் இடம் பிடித்த இந்திய வீராங்கனைகள் யார் யார்? தெரிஞ்சுக்குங்க...

 
Published : Dec 22, 2017, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
ஐசிசி மகளிர் அணியில் இடம் பிடித்த இந்திய வீராங்கனைகள் யார் யார்? தெரிஞ்சுக்குங்க...

சுருக்கம்

Who are the Indian wrestlers in ICC Women Team? UNLOCK ...

ஐசிசி - 2017மகளிர் அணியில் இந்திய வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஏக்தா பிஷ்த், ஹர்மன்பிரீத் கெளர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஏக்தா பிஷ்த், 19 ஒருநாள் போட்டிகளில் 34 விக்கெட்டுகளும், 7 டி20 போட்டிகளில் 11 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

அதேபோல, மகளிர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால்  மிதாலி மற்றும் ஹர்மன்பிரீத் முறையே தங்களது அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர். 2016 செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் வீராங்கனைகளின் செயல்பாடு அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இந்திய கேப்டன் மிதாலி ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க, ஹர்மன்பிரீத் கெளர் டி20 அணிக்கு தேர்வாகியுள்ளார்.

பந்துவீச்சாளரான ஏக்தா பிஷ்த் இரு அணிகளிலுமே இடம்பிடித்த பெருமையை பெற்றுள்ளார்.

ஐசிசி நேற்று வெளியிட்ட இந்த அணிகளில் ஒருநாள் அணி கேப்டனாக இங்கிலாந்தின் ஹீதர் நைட்டும், டி20 அணி கேப்டனாக மேற்கிந்திய தீவுகளின் ஸ்டெஃபானி டெய்லரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் ஹீதர் நைட் உலகக் கோப்பை போட்டியிலும், ஸ்டெஃபானி டி20 கோப்பை போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டால் என்பது குறிப்பிடத்தக்கது..

ஐசிசி ஒருநாள் அணி:

டேமி பியூமன்ட், மெக் லேனிங், மிதாலி ராஜ், ஏமி சேட்டர்த்வெய்ட், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், சாரா டெய்லர், டேன் வான் நீகெர்க், மாரிஸானி காப், ஏக்தா பிஷ்த், அலெக்ஸ் ஹார்ட்லே.

ஐசிசி டி20 அணி:

பெத் மூனி, டேனி வியாட், ஹர்மன்பிரீத் கெளர், ஸ்டெஃபானி டெய்லர், சோஃபி டிவைன், டீன்ட்ரா டோட்டின், ஹேலே மேத்யூஸ், மீகன் ஷட், அமான்டா ஜேட் வெல்லிங்டன், லியா டஹுஹு, ஏக்தா பிஷ்த்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!
T20 World Cup: இந்திய அணியின் துணை கேப்டனை தூக்கி எறிந்தது ஏன்..? ரகசியம் உடைத்த தேர்வுக்குழு