விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் அஷ்வின்!! இதுதான் காரணமா..?

By karthikeyan VFirst Published Sep 2, 2018, 11:01 AM IST
Highlights

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், அதன்பிறகு விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் திணறிவருகிறார். 
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், அதன்பிறகு விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் திணறிவருகிறார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களும் இந்திய அணி 273 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பவுலிங்கை பொறுத்தமட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தொடரில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின், முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறிவருகிறார். 

முதல் போட்டியில் 7 இடது கை பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை, வலது கை ஆஃப் ஸ்பின்னரான அஷ்வின் சரித்தார். முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு பெரிதாக அஷ்வின் சோபிக்கவில்லை. இரண்டாவது போட்டியில் விக்கெட்டே வீழ்த்தவில்லை, மூன்றாவது போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். நடந்துவரும் நான்காவது போட்டியில் இதுவரை 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்னும் இங்கிலாந்து வசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளது. 

அஷ்வினால் முதல் போட்டிக்கு பிறகு விக்கெட்டுகள் வீழ்த்த முடியாததற்கு கவாஸ்கரும், சஞ்சய் மஞ்சரேக்கரும் சொன்னதும் முக்கிய காரணமாக இருக்கலாம். முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு அஷ்வினிடம் முன்னாள் வீரர் இயன் வார்ட் பேட்டி எடுத்தபோது, நாசூக்காக அஷ்வினிடம் பந்தை கொடுத்து அவரது உத்தி குறித்து கேட்டார். அதற்கு சற்றும் யோசிக்காத அஷ்வின், தனது உத்தி, பந்துவீசும் முறை, குறிப்பிட்ட டெலிவரிகளை அவர் எப்படி வீசுகிறார் என்ற ஆக்‌ஷன் ஆகியவற்றை செய்து காட்டினார். அதை பார்த்து இங்கிலாந்து வீரர்கள், அஷ்வினின் பந்துவீச்சை எப்படி சமாளிப்பது என்று திட்டமிட்டு பயிற்சியெடுத்திருப்பார்கள்.

ஏனென்றால் அஷ்வினின் பவுலிங்கை மிகவும் நிதானமாக தெளிவாக கையாண்டு ஆடுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள். இதுதான் அஷ்வின் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் திணறுவதற்கு காரணமாக இருக்கலாம். 

click me!